ஆன்லைன் ரம்மிக்கு தடையா? தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
Government of Tamil Nadu
By Thahir
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் ஆலேசானை
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியால் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் முதலமைச்சரின் தனிச்செயலர் உதயசந்திரன், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.