தேர்தலில் பின்வாங்கிய அதிமுக - பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன்!

Tamil nadu DMK K. R. Periyakaruppan
By Jiyath Jun 18, 2024 09:42 PM GMT
Report

எடப்பாடி பழனிச்சாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர்  இல்லை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் 

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தில் கூட்டுறவுத்துறை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பெரிய கருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.

தேர்தலில் பின்வாங்கிய அதிமுக - பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன்! | Minister Periakaruppan About Edappadi Palanisamy

அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன் "அதிமுக இடைத்தேர்தலில் நிற்கவில்லை என கூறி உள்ளனர். இப்போது நாம் உஷாராக இருக்க வேண்டும். அதிமுக, பாஜக கள்ள கூட்டணி வைத்து நமக்கு எதிராக வேலை பார்ப்பார்கள்" என்றார்.

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்!

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்!

தகுதியானவர் இல்லை 

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன் "பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்தவர்கள் அதனை நீட்டிக்கும் வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடுவதில்லை என கூறியுள்ளனர்.

தேர்தலில் பின்வாங்கிய அதிமுக - பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை - அமைச்சர் பெரியகருப்பன்! | Minister Periakaruppan About Edappadi Palanisamy

அது அச்சமா அல்லது அழுத்தத்தின் காரணமா என தெரியவில்லை. இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால், பழனிச்சாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.