பிரச்சாரத்தில் அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரப்பு!

Tamil nadu K. N. Nehru Perambalur
By Sumathi Mar 27, 2024 09:35 AM GMT
Report

பிரச்சாரத்தின் போதே அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அமைச்சர் நேரு

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் அருண் நேரு திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால், குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

kn nehru

இதனைத் தொடர்ந்து, கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் துவங்கியபோது, நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்தார்.

சாயம் போகாத கட்சி திமுக...அமைச்சர் கே.என்.நேரு

சாயம் போகாத கட்சி திமுக...அமைச்சர் கே.என்.நேரு

உடல்நலக்குறைவு

அப்போது அவர், எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன் என்று கூறியபடி, எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன் எனத் தெரிவித்தார்.

பிரச்சாரத்தில் அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரப்பு! | Minister Nehru Falls Ill Perambalur

பின் பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.