6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கன் பிரியாணியுடன் தடபுடலான விருந்து - அசத்திய அமைச்சர் நேரு!
திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நேரு அசத்தலான விருந்து அளித்து அசத்தியுள்ளார்.
பயிற்சி பாசறை கூட்டம்
நாடு முழுவதும் 2024-ல் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல காட்சிகள் தயாராகி வருகின்றனர். அதில் திமுகவும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மாநிலம் முழுவதும் தி.மு.க. 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது திருச்சியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு முதல்மைச்சர் ஸ்டாலின் சென்று அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
விருந்து
இந்நிலையில், இந்த கூட்டத்தில் 12,000 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் 30 ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 15 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதற்காக 5000 கிலோ அரிசி 6000 ஆயிரம் கிலோ மட்டன், 4 ஆயிரம் கிலோ சிக்கன் 65 வறுவல், முட்டை மற்றும் முட்டை சாதம் என பிரம்மாண்டமான பந்தலில் அறுசுவை சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30,000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, ஆனியன், தால்சா, தயிர் சாதம் மதிய உணவாக சுவையான உணவை திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு ஏற்பாடு செய்து விருந்து அளித்துள்ளார்.