ஆண்ட பரம்பரை என்பது மனதில் இருக்கட்டும் - சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் மூர்த்தி!

DMK Madurai
By Sumathi Jan 02, 2025 03:59 AM GMT
Report

அமைச்சர் மூர்த்தி சாதி ரீதியாக பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சர்ச்சை பேச்சு

பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில் பேசிய அவர்,

minister moorthy

“ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். தற்போது நான்கு பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது.

சுதந்திரத்திற்காக இந்த சமுதாயத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை தெரிந்துகொள்ள வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். அந்த வரலாறுகளை எல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது கொள்ளையடித்துச் செல்லும் பொழுது இந்த சமுதாயம்தான் முன்னுக்கு நின்றது.

சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி? கடைசியா.. ஓபிஎஸ் நச் பதில்!

சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி? கடைசியா.. ஓபிஎஸ் நச் பதில்!

ஆண்ட பரம்பரை கருத்து

ஒரே நேரத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். விவசாயத்துறையில், தொழில்துறையில் நம்மவர்கள் முன்னில் இருந்தாலும்கூட, படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரமுடியாத சூழல் இருக்கிறது.

ஆண்ட பரம்பரை என்பது மனதில் இருக்கட்டும் - சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் மூர்த்தி! | Minister Moorthy Contro Speech About Caste Madurai

தற்போது அரசு வேலை வாய்ப்பில் நீங்கள் வந்துகொண்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன். தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது என்றார்” எனத் தெரிவித்தார். தற்போது இவரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.