"பாரத் மாத கி ஜே" சொல்ல மாட்டிங்களா..? கடுப்பான மத்திய அமைச்சரின் அதிர்ச்சி செயல்.!

BJP Kerala
By Karthick Feb 04, 2024 09:13 AM GMT
Report

நிகழ்ச்சி ஒன்றில் பாரத் மாத கி ஜே சொல்ல மறுத்த பெண்ணால் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி அதிருப்தி அடைந்ததுள்ளார்.

"பாரத் மாத கி ஜே"

கேரளாவில் வலதுசாரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவிற்கான மத்திய வெளியுறவு துறை அமைச்சர் மீனாட்சி லேகி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

minister-meenakshi-lekhi-bharat-mata-ki-jai

நிகழ்ச்சியில், தனது உரையை “பாரத் மாதா கி ஜெய்” என்ற கோஷத்துடன் லேகி முடிக்க, அதைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொன்னார். ஆனால், பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், பாரத் அவர்களின் வீடு இல்லையா என்று மீனாட்சி லேகி கேள்வி எழுப்பினார்.

இன்னும் ஏழே நாள்.. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் உறுதி!

இன்னும் ஏழே நாள்.. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் உறுதி!

வெளியேறுங்கள்..

மேலும், “நீங்கள் கைகளை மடக்கி அமர்ந்திருப்பதை நான் பார்க்கமுடிவாத தெரிவித்து, பாரதம் என் தாயா அல்லது உன் தாயா? ஏதாவது சந்தேகம் இருக்கா? சந்தேகம் இல்லை தானே...உற்சாகத்தை வெளிப்படுத்துங்கள் என்றார்.

இருப்பினும் ஒரு பெண் திரும்ப கூறாத காரணத்தால், அவரை குறிப்பிட்டு, உங்களிடம் ஒரு நேரடியான கேள்வியைக் கேட்கிறேன் பாரதம் உன் தாய் இல்லையா?... ஏன் இந்த அணுகுமுறை?” என்று கேட்டு, "நீங்கள் அரங்கை வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.