Friday, May 23, 2025

இன்னும் ஏழே நாள்.. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் உறுதி!

Government Of India India
By Jiyath a year ago
Report

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாகூர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம்

பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது.

இன்னும் ஏழே நாள்.. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் உறுதி! | Citizenship Law To Be Implemented In A Week

இந்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்தியா வந்த முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்களும் வெடித்தன. இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு உள்ளது

பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை - நீதிமன்றம் உத்தரவு!

பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை - நீதிமன்றம் உத்தரவு!

அமல்படுத்தப்படும்

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய துறைமுகங்கள், நீர்வழித்துறை இணை அமைச்சர் சாந்தனு தாகூர் கூறியுள்ளார்.

இன்னும் ஏழே நாள்.. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் உறுதி! | Citizenship Law To Be Implemented In A Week

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் "நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும். இது எனது உத்தரவாதம்' என்று தெரிவித்துள்ளார்.