குரங்கு சர்ச்சை: அவர் அப்படி இருப்பதால் சொல்லிருப்பாரு.. கலாய்த்த அமைச்சர் மனோதங்கராஜ்
அண்னாமலயின் பேச்சுக்கு, அமைச்சர் மனோதங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
குரங்கு சர்ச்சை
தமிழக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி பாஜக சார்பில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துக்கொண்ட தமிழக பாஜக தலைவர் செய்தியாளர்கலை சந்தித்தார்.
அப்போது, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என ஒருமையில் பேசினார். அதற்கு இன்னும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும், அதற்கு அவர் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என கூறியிருந்தார்.
கலாய்த்த அமைச்சர்
இந்நிலையில், அமைச்சர் மனோதங்கராஜூடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில், அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை விமர்சித்து வருவதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர்,
அவர் பத்திரிகையாளர்களை குரங்கு என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பத்திரிகையாளர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால், நீங்கள் வருத்தப்படாதீர்கள், சிலர் தங்களை வைத்துதான் மற்றவர்களை ஒப்பிடுவார்கள். அவர் ஒருவேளை அப்படி இருப்பதால் கூட சொல்லியிருப்பார்'' என தெரிவித்துள்ளார்.