தாண்டவமாடும் கொரோனா: புத்தாண்டை இப்படிதான் கொண்டாடனும் - அமைச்சர் எச்சரிக்கை!

COVID-19 Tamil nadu Ma. Subramanian Festival
By Sumathi Dec 27, 2022 12:50 PM GMT
Report

புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா பரவி வரும் நிலையில், மக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்படுவதும்,

தாண்டவமாடும் கொரோனா: புத்தாண்டை இப்படிதான் கொண்டாடனும் - அமைச்சர் எச்சரிக்கை! | Minister Ma Subramanian Advises New Year

தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்தில் உறுதி படுத்தப்படுவதற்குமான வழிகாட்டுதல், துறையின் செயலாளர் மூலம் இப்போது விடுக்கப்படுகிறது. புத்தாண்டு, சமய விழாக்கள், அல்லது அரசியல் காட்சிகள் நடத்துகிற எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், எதற்கும் கட்டுப்பாடுகள் என்பது இல்லை.

புத்தாண்டு

அதே நேரத்தில், சுய கட்டுப்பாடுகள் அவரவர்களுக்கு வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்று. மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், உடல் நலம் நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும்.

உடல் நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும் என்றால், முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் உபயோகித்துக் கொள்ள வேண்டும், தனி மனித இடைவேளியை கடைபிடிக்க வேண்டும். இது எல்லாமே, கொரோனா விதிமுறைகளில் தொடர்ந்து கூறப்படுவதாகும்.

அமைச்சர் எச்சரிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் விதிக்கப்பட்ட இந்த விதிமுறைகளை இதுவரை அவை தளர்த்தப்படவில்லை. எனவே, அது இப்போது நடைமுறையில் இருக்கிறது. இப்போது தேவை என்று கருதப்படுகிறது. எந்த நிகழ்ச்சி நடக்க இருந்தாலும்,

இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால், அவர்களுக்கும் நல்லது, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது”, என்று கூறுகிறார்.