செந்தில் பாலாஜி உடல்நிலை.. என்ன நிலைமை? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கூறியுள்ளார்.
உடல்நல குறைவு
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு சிறை தண்டனை நீடிக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் பித்தப்பையில் கல் இருப்பது உறுதியானது.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளிவரும்.
அதுவரை எதுவும் கூற இயலாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார்" என்று கூறியுள்ளார்.