மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2028 ஆம் ஆண்டு நிறைவுபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028ம் ஆண்டு முழுமையாக நிறைவடையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி
மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை எய்ம்ஸ் குறித்து பேசினார்.
அதில், கடந்த வாரம் நடைபெற்ற மாநில சுகாதார அமைச்சர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் 14 கோரிக்கைகளை வைத்திருந்தோம். அந்த 14 கோரிக்கைகளில் முதன்மையான ஒன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்பதுதான்.
அவர்களிடத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை உடனடியாக தொடங்கின நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மற்ற இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை பொருத்தவரை மத்திய அரசின் நிதி பங்களிப்பு இருந்தது.
2028 இறுதியில் தொடங்கும்
மதுரையைப் பொருத்தவரை மத்திய அரசு நிதி பங்களிப்பு இல்லை. முழுமையாக ஜெய்காவிடம் கடன் வாங்கி கட்டுவதுதான் திட்டமாக உள்ளது.
ஜெயிக்கா நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒருங்கிணைப்பில் குறைபாடுகள் இருந்த காரணத்தினால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் காலதாமதம் ஆனது. 2024 இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் பொழுது, கட்டுமிடிக்கப்படுவதற்கு ஒரு நான்கு ஆண்டுகள் ஆகும்.
எனவே, 2028 இறுதியில் தான் இது செயல்பாட்டிற்கு வரும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த வகையில், முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டிசைன் டெண்டர் விடப்பட வேண்டும்.
அதன் பிறகு ஒட்டுமொத்த கட்டுமான பணிகளுக்காக டெண்டர் விடப்படும். இது எல்லாம் 2028 இறுதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.