ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகையா? அமைச்சர் விளக்கம்

Tamil nadu Government of Tamil Nadu Sattur Ramachandran Women
By Karthikraja Nov 13, 2024 07:30 PM GMT
Report

ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் மகளிர் உரிமை தொகை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் விளக்கமளித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை

2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 2023 செப்டம்பர் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

magalir urimai thogai

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் செயல்படும் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

ஆண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

ஆண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

அமைச்சர் விளக்கம்

தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 32 லட்சம் பயனாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த உரிமை தொகை பெற அரசு வேலையில் இருக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பித்த பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அருப்புக்கோட்டையில் அரசு நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 2024 ஜனவரி முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என கூறியதாக தகவல் வெளியானது. இது குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தற்போது அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும் என விளக்கமளித்துள்ளார்.