அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி -தொண்டர்கள் அதிர்ச்சி!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சருக்கு உடல்நலக்குறைவு
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால், தமிழக அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டி மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்கு மிக சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டை ஆளும் திமுக கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பரப்புரையாற்றி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி
ஒவ்வொரு அமைச்சருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதனை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வேட்பாளருக்காக இரவு பகலாக அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சென்னையில் இருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில், அமைச்சர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.