திடீர் உடல்நல பிரச்சனை..சென்னை அப்போலோவில் அமைச்சர் ஐ.பெரியசாமி!
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பெரியசாமி
தற்போதைய தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் ஐ.பெரியசாமி. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் அவரின் வயது 71.
கடந்த சில நாட்களாகவே அவர் காய்ச்சலின் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தகவல் உள்ளது. இந்த நிலையில், காய்ச்சல் அதிகமாகியதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில்
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் உள்ளார்.
தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், துறைசார் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் வரும் அவரை, ஒரு வாரத்திற்காவது ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.