ஐ.பெரியசாமிக்கு செக் வைத்த நீதிமன்றம் - அமைச்சர் விடுவிக்கப்பட்டது ரத்தானது..!
அமைச்சர் ஐ.பெரியசாமியின் வழக்கில் இன்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வழக்கின் பின்னணி
2008-ஆம் ஆண்டு அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த திமுகவின் ஐ.பெரியசாமி வாரியத்தின் மனையை ஒதுக்கியதில் முறைகேடு செய்தார் என புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு வீட்டு மனை ஒதுக்கியத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2012-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார் ஐ.பெரியசாமி.
விடுதலை ரத்து
அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணையை துவங்கியது.
இதில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் விசாரணையை தினந்தோறும் நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, ஜூலை மாதத்திற்குள் வழக்கின் விசாரணையை முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.