ஐ.பெரியசாமி வழக்கு...நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாத்தணும்...நீதிபதி கருத்து..!!
ஐ பெரியசாமி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கீழமை நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை பார்க்கும் போது, நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ பெரியசாமி வழக்கு
இந்நிலையில் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணையை துவங்கியது.
இந்த வழக்கில் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அவர் தனது உத்தரவில் லஞ்சஒழிப்பு துறை, அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தன்னுடைய உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கீழமை நீதிமன்றங்களின் செயல்களை பார்க்கும்போது நீதித்துறை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என தோன்றுவதாக குறிப்பிட்டார்.
மேலும், வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொண்டால் தன்னை வில்லன் போல பார்ப்பதாக குறிப்பிட்ட அவர்,
ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிகொள்ள விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.