மேடையிலேயே பெண் அமைச்சருக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமைச்சர் - எழும் கண்டனங்கள்!

European Union Germany
By Vinothini Nov 05, 2023 11:14 AM GMT
Report

பெண் அமைச்சருக்கு முத்தம் கொடுக்க முயன்றது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மாநாடு

ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்தது.

minister-gordon-tried-to-kiss-germany-minister

இந்த மாநாட்டிற்கு ஐரோப்ப யூனியனை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அவர்களை ஜெர்மனி வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் அன்னாலெனா பேர்போக் வரவேற்று, பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று மேடையில் புகைப்படம் எடுத்து கொள்ள நின்றார்.

சொல்லியும் கேட்கல.. விடாப்பிடியாக நிற்கும் இஸ்ரேல் - நெருக்கடியில் பைடன்!

சொல்லியும் கேட்கல.. விடாப்பிடியாக நிற்கும் இஸ்ரேல் - நெருக்கடியில் பைடன்!

முத்தம்

இந்நிலையில், குரேஷியா நாட்டின் 65 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன், அவரை வரேவற்ற ஜெர்மனி பெண் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கைக்குலுக்கிவிட்டு கன்னத்தில் திடீரென முத்தமிட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அமைச்சர் சற்று விலகினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

minister-gordon-tried-to-kiss-germany-minister

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த குரேஷியா வெளியுறவுத்துறை அமைச்சர் கோர்டன் கிர்லிக் ராட்மேன் கூறுகையில், ‛‛சக ஊழியரிடம் அன்பான முறையில் தான் நடந்து கொண்டேன். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்னவென்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.