ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக...13 பெண் அமைச்சர்கள் பதவி ஏற்பு!

Australia
By Thahir Jun 02, 2022 10:18 AM GMT
Report

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக 13 பெண் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21ம் தேதி, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கூட்டணியை வீழ்த்தி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக...13 பெண் அமைச்சர்கள் பதவி ஏற்பு! | 13 Women New Ministers Take Office

புதிய பிரதமராக ஆண்டனி ஆல்பனேசி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து, தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்கள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 பேரை கொண்ட அமைச்சரவையில் 13 பேர் பெண்கள் ஆவர்.