குட் நியூஸ்.. பொங்கலுக்கு வேட்டி, சேலை ஒப்படைப்பு, எப்போ வரும்? - அமைச்சர் தகவல்!
அமைச்சர் காந்தி பொங்கல் பண்டிகையில் பயனாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்குவது குறித்து பேசியுள்ளார்.n
ஜவுளி கருத்தரங்கம்
தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் கோவையில் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.
அமைச்சர் தகவல்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, "பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும்,
வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.