எது தமிழ்நாட்டுல 10 ஆயிரம் பேருக்கு வேலையா? அமைச்சர் அதிரடி! பொதுமக்கள் மகிழ்ச்சி!
கிருஷ்ணகிரியில் அமையவுள்ள ஓலா தொழிற்சாலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் தொடங்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஏராளமான பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இளைஞர்கள் பலர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுகிறது. முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் செய்யாறு, திண்டிவனம் ஆகிய இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமையவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிர்த்துள்ளார்.
மேலும், இந்த ஆலையில் இரு சக்கர வாகனத்துக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக்மொபைலிட்டி நிறுவன அதிகாரிகள் முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில், திண்டிவனம், செய்யாறு பகுதிகளில் தொழிற்சாலைகள், கடலூரில் எச்.பி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் மற்றும்
சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமுடன் உள்ளன என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த இளைஞர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.