ஸ்கூல் திறந்த ஒரே நாள் தான் ஆகுது...மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் காந்தி !!
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வு கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கு சமூக நலத் துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பள்ளி சீருடை துணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக நலத் துறைக்கு வழங்கப்படவேண்டிய 237.36 இலட்சம் மீட்டர் துணிகளில் தற்போது 149.65 இலட்சம் மீட்டர் துணி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாப்பி நியூஸ்
மேலும், தினசரி துணிகள் விநியோகம் செய்யப்படும் அளவினை சமூக நலத் துறைக்கு அதிகரித்து 20.06.2024-க்குள் இரண்டு இணைக்கான துணிகள் முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அரசு பள்ளிகளுக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டிய சீருடைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பள்ளிகள் நேற்று ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.