கட்டுமான பணி ஆய்வு.. திடீரென பள்ளத்தில் விழுந்த அதிகாரி, நூலிழையில் தப்பிய அமைச்சர் - பரபரப்பு!

Tamil nadu Madurai E. V. Velu
By Vinothini Oct 06, 2023 07:52 AM GMT
Report

ஆய்விற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சென்றதில் ஒருவர் பள்ளத்தில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு

மதுரை மாவட்டம், திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் எ.வ.வேலு

இந்த ஆய்வின் போது கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் அவருடன் சென்றனர். அப்பொழுது அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஒரு வாரம்.. தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

ஒரு வாரம்.. தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

தப்பிய அமைச்சர்

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில், "திருமலைநாயக்கர் மகால் புனரமைப்பு பணி ரூ.12 கோடி செலவில் நடந்து வருகிறது. இங்குள்ள தர்பார் ஹால், பள்ளியறை, நாடக சாலை, நூலகம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்படும்" என்று கூறினார்.

திருமலை நாயக்கர் மகாலில்

பின்னர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருந்த போது கட்டுமான பணியின் மீது நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு அதிகாரி கட்டுமானம் உடைந்து தவறி விழுந்தார். அதில் அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் எ.வ வேலு நூலிழையில் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.