பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தரோம் வாங்கிட்டு சினிமாக்கு போ - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

M K Stalin Tamil nadu DMK Durai Murugan Chief Minister of Tamil Nadu
By Vinothini May 01, 2023 10:27 AM GMT
Report

வேலூரில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சர்ச்சைகளில் சிக்கும் திமுக அமைச்சர்கள்

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டு காலத்தில், கட்சியின் அமைச்சர்கள் தொடர்ந்து மேடைகளில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியும், சரியில்லாத நடவடிக்கையாலும் அவர்கள் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் படி நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே என் நேரு, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அமைச்சர் நாசர் போன்றோர் அனைவரும் செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் திமுகவின் வரலாற்றில் மக்கள் மத்தியில் மிகுந்த கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது.

minister-duraimurugan-speech-vellore-

மேலும், இது குறித்து முதல்வரே, விடிந்தால் கட்சி அமைச்சர்கள் எந்த நேரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற பயத்துடன் இருக்க வேண்டியதா இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

மீண்டும் சர்ச்சையில் துரைமுருகன் 

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பெண்களை தாக்கி பேசியுள்ளார். அவர் மேடையில் பேசியது, ""செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அப்படியே மனைவி சம்பாதிப்பதை கணவன் வாங்கி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்' என்றும்.

minister-duraimurugan-speech-vellore-

மேலும், ''உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்.. நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" என்று இவர் பேசும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்த எஸ்ஆர் சேகர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.