தண்ணீரை சிக்கனமாக...விவசாயிகளிடம் அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!!
காவிரி நதிநீர் பிரச்சனை மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது.
துரைமுருகன் வேண்டுகோள்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். காட்பாடி பகுதியில் சுமார் 11 லட்சத்தி 11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் இந்த அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டும் நீரை சிக்கனமாக விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அவருக்கு தெரியாது
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டதாக இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ''அவருக்கு தெரியாது, சரபங்கா திட்டத்தை துவங்கி வைத்து விட்டு போயிட்டார். அதன் பிறகு நாங்கள் வந்துதான் அதை முழுதாக முடித்திருக்கிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து, இன்னும் இறுதியாக கொஞ்சம் ஏரிகள் உள்ளன. காரணம், தண்ணீர் போகும் இடத்தின் நடுவே சில தனியார் நிலங்கள் உள்ளன. அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். மற்றபடி ஏற்கனவே இதை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மற்ற ஏரிகளுக்கெல்லாம் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
சரபங்கா அவருடைய ஊருக்கு பக்கம் தான், போய் பார்த்துவிட்டு வரலாம் என்று அறிவுரை கூறிய துரைமுருகன், மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் உபரி நீரைத்தான் சரபங்கா திட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் எடுத்துரைத்தார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக பயன்படுத்தி வருவதாக கூறி, ஆங்காங்கே வழியில் நீர் ஏற்று நிலையங்களை அமைத்து பாசனத்திற்கும் தண்ணீர் எடுத்து செல்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.