அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நல கோளாறு!! சென்னை அப்பல்லோவில் அனுமதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கொண்டாட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் வந்த மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த இன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 20 சுற்றுகள் எண்ணிக்கை நடைபெறும் சூழலில் மத்திய 1 மணி நிலவரப்படி, திமுகவின் வேட்பாளர் அன்னியூர் சிவா 94,322 வாக்குகளை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
பாமகவின் சி. அன்புமணி 40,587 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயா 7423 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 53,735 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கும் சூழலில் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மருத்துவமனையில்..
இதனை திமுகவினர் மாநிலத்தின் பல இடங்களிலும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கொண்டாட்டத்திற்காக மு.க.ஸ்டாலினுடன் அண்ணா அறிவாலயம் வந்திருந்த மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அவர் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.