காவிரி விவகாரம்: தண்ணீரை எப்படி பெறுவது என்று எங்களுக்குத் தெரியும் - துரைமுருகன்!
காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
துரைமுருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதியதாக கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
எங்களுக்கு தெரியும்..
கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த அமைச்சராவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகையால், கர்நாடகாவிலிருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.