அமைச்சர் பிடிஆரை சந்திக்கப்போகும் அன்பில் மகேஷ் - என்னவா இருக்கும்?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மாநில மாநாடு
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தைக் கொண்டு வர வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாநில மாநாட்டை செப்டம்பர் 10ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. விடுபட்டு போன 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது,
அமைச்சர் அன்பில் மகேஷ்
எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்வது, அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, வருகிற 10ம் தேதி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை பூர்த்தி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திக்க உள்ளதாகவும், அப்போது ஆசிரியர்களின் 15 கோரிக்கைகள் தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ஓரிரு நாட்களில் நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.