ஆளுநர் அரசு பள்ளிகள் குறித்து பேசுவதை வரவேற்கிறேன் -அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆளுநர் ஆர்.என்.ரவிஅரசுப் பள்ளிகள் குறித்துப் பேசுவதை வரவேற்கிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எண்ணித் துணிக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,'' தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 60% மாணவர்கள் படிக்கிறார்கள்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் 75% மாணவர்களில் 40% மாணவர்களால் அவர்களது பாடப் புத்தகங்களைக்கூடப் படிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது.
அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன '' எனத் தெரிவித்து இருந்தார்.ஆளுநரின் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை வரவேற்கிறேன்; ஆளுநரின் விமர்சனம் காரணமாகத் தான்.
இன்று பலரும் தாங்கள் அரசுப்பள்ளியில் படித்து இன்று சமூகத்தில் பெரிய அளவில் முன்னேறியிருப்பது குறித்து பெருமையுடன் பேசி வருகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.