ரஜினியை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அன்பில் மகேஸ்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வயிறு ஒவ்வாமை காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் . அதன் காரணமாக லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர், இன்று வீட்டிற்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்,
தற்போது அமைச்சர் ஒருவர் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.