ஆளுநரை நூலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளது என விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆளுந ரவி
திருச்சியில் நடைபெற்ற ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் விழாவில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,'' மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளது என ஆளுநர் கூறியிருந்தது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு,'' இவரை நான் 180 மேற்பட்ட பள்ளிகள் ,ceo அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன் .
அதில் அதிகப்படியாக நான் சென்றது நூலகங்களுக்குத் தான். அங்கு மாணவர்கள் அதிக அளவில் upsc தேர்வுகளுக்கும் tnpsc தேர்வுகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தி கொண்டிருந்தனர்.அப்போது அவர்களிடன் உரையாடும் போது ,' 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான மாநில கல்வி புத்தங்கள் அதிக அளவில் உள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ்
குறிப்பராக tnpsc தேர்வுகளில் அதிகப்படியாக மாநில கல்வி புத்தங்கள் கொண்டுதான் கேள்விகள் கேட்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே மாநில பாடத்திட்டத்தை பாராட்டுகின்றனர்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையாகத் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் உள்ளது என்று கூறினார் . தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செய்படுத்தபட்டு வருகிறது .
வேண்டுமானால் ஆளுநரை நூலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.. அவரே மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்கொடுத்துள்ளார்.