திராவிட மாடல் ஆட்சியின் சாதனை; முதலிடத்தில் வந்துவிட்டோம் - அன்பில் மகேஷ் பெருமிதம்!
உள்நாடு உற்பத்தியில் நாம்தான் 2-ம் இடத்தில் இருக்கின்றோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக அரசின் 3 ஆண்டுகள் சாதனை விளக்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "உள்நாடு உற்பத்தியில் நாம்தான் 2ம் இடத்தில் இருக்கின்றோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. ஏற்றுமதி குறியீட்டில் நாம் முதலிடத்தில் வந்துவிட்டோம்.
மாதம் ரூ.1000
தொழிலாளர்கள் முதலீடு என்று வரும்போது 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது 3வது இடத்துக்கு கொண்டுவந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 கொடுக்கின்றார்.
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்க தமிழ்புதல்வன் திட்டத்தை கொண்டுவந்துள்ளார். புத்தொழில் புத்தாக்க கொள்கை 2023ம் ஆண்டு கொண்டுவந்து கொள்கை மூலமாக ஸ்டார்ட் அப் முன்னேற்றம் கண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.