தமிழகத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி!

Tamil nadu BJP Anbil Mahesh Poyyamozhi
By Vidhya Senthil Aug 28, 2024 06:13 AM GMT
Report

புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 அன்பில் மகேஸ்

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,''கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில்  தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.

தமிழகத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி! | Minister Anbil Mahes Has Accused The Central Govt

மேலும் நகர்ப்புற , கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி மலைபிரசேதங்களில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி பயில முடியாத நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி என்ற முறையைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

 மத்திய அரசு

இந்த நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது.பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்தியக் கல்வித்துறை தெரிவிக்கிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி! | Minister Anbil Mahes Has Accused The Central Govt

பள்ளிக்கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விடக் குறைவான நிதியையே மத்திய அரசு கொடுக்கிறது மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.