பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சுகாதார துறை வழிகாட்டுதல் படி பள்ளிக் கல்வித்துறை முடிவெடுக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
பப்ளிக் போலீஸ் என்னும் அமைப்பு சார்பில் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பள்ளிகளுக்கு காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிப்பது குறித்து சுகாதார துறையின் வழிகாட்டுதல் படியே பள்ளிக் கல்வித் துறை செயல்படும் என்றும், 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
பள்ளி விடுமுறை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் அதிக அளவில் வரவில்லை எனவும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும்
பொதுத்தேர்வு வைக்கப்படுவதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்வுக்கு வரவில்லையா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.