வெள்ள பாதிப்பு.. அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அரையாண்டு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டதா என்று அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு..
வங்ககடலில் உருவான “ஃபெஞ்சல்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாலை வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் சிக்கி உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கபட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது.
அன்பில் மகேஷ்
இந்த நிலையில், சென்னையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியிருப்பது, வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும்.
மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் 9-ம் தேதி முதல் நடைபெறும். 9-ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம்.
தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ்கள் வைத்திருக்கும் அறைகள் தரை தளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.