கொடுத்தா குற்றம் சொல்றீங்க; கரும்பு வழங்காதது குறித்து அமைச்சர் விளக்கம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்காதது குறித்து அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் அளித்துள்ளார்.
கரும்பு இல்லை
பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அதில் கரும்பு வழங்கவில்லை. அதனையும் சேர்த்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏன் தமிழக அரசு கரும்பை கொள்முதல் செய்யவில்லை என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பை கொடுத்தால் சிறிய முந்திரியாக இருப்பதாகவும்,
வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதை உணர்ந்து தான் முதலமைச்சர் உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று 1000 ரூபாய் பொங்கலுக்கு அறிவித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.