இனி பாஸ்மதி பிரியாணி கிடைக்காதா? மத்திய அரசு செய்த செயல்!
பாஸ்மதி அரிசி மீதான ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி
பாஸ்மதி அரிசியில் சமைக்கும் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி உண்ணும் உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், பாஸ்மதி அரிசிக்கான தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அதன் விலையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பாஸ்மதி அரிசிக்கான விலை என்பது 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி விலை
எனவே, தற்போது பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும்போது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை வரியாக செலுத்த வேண்டும்.
அந்த வகையில் ஒரு டன் (1,000 கிலோ) பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யும்போது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக ரூ.1 லட்சத்து 657 இருந்தது. தற்போது அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும்.
இதன்மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது
இதனால் உள்நாட்டிலும் பாசுமதி அரிசி விலை உயர வாய்ப்புள்ளதால், பாஸ்மதி அரிசி எளிதாக கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.