பாஸ்மதி அரிசியில் நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது - அதிரடி உத்தரவு!
பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கவும், பட்டை தீட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிறமூட்டி சேர்க்க தடை
பாஸ்மதி அரிசி சற்று விலை கூடுதல் என்பதால் பிரியாணி, புலாவ் போன்ற சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதிலும் ஹோட்டல்களில் உணவு மக்களை கவர்வதற்காக செயற்கையான நிறமூட்டிகள் சேர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அது ஒருவகையில் உடல்நலத்திற்கு கெடுதலும் கூட... இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கவும் பட்டை தீட்டவும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரநிலைகள் பாசுமதி அரிசி வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை நிறுவுவதையும் உள்நாட்டிலும் உலக அளவிலும் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என இந்திய அரசு தெரிவித்துள்ளது.