சென்னையில் மீண்டும் மினி பஸ் - இந்த பகுதிகளுக்கு மட்டும் தான்
சென்னையில் மீண்டும் மினி பஸ் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மினி பேருந்து
தமிழ்நாடு முழுவதும் சிறிய ஊர்கள் மற்றும் குறுகிய தெருக்களுக்கு பேருந்து சேவையை செயல்படுத்த ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது.
எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTO-க்கள் முடிவு செய்யலாம். அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும்.
இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.