குளத்தில் தாமரை மலர்ந்தால் கூட டென்ஷன் ஆகிறாரா? தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!

Smt Tamilisai Soundararajan Tamil nadu DMK Chennai P. K. Sekar Babu
By Swetha Nov 08, 2024 10:57 AM GMT
Report

தாமரையை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டதாக தமிழிசை கூறிய்தற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

தமிழிசை

சென்னை, போரூரில் உள்ள பசுமை பூங்காவில் மைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குளத்தில் தாமரை மலர்ந்திருப்பதை பார்த்ததும், தாமரை எங்கேயும் மலரக்கூடாது, அதனை உடனடியாக நீக்குங்கள் என்று கட்டலையிட்டு இருந்தார்.

குளத்தில் தாமரை மலர்ந்தால் கூட டென்ஷன் ஆகிறாரா? தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி! | Mimister Sekar Babu Reacts To Tamilisais Speech

இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார். ”குளத்தில் தாமரை மலர்ந்திருப்பதை பார்த்ததும் அமைச்சர் சேகர்பாபு டென்ஷன் ஆகிவிட்டார். தாமரையை நீக்கினால் நாங்கள் டென்ஷன் ஆகிவிடுவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழிசை கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, "நாங்கள் ஏன் டென்ஷனாக வேண்டும்? தாமரை மலர்ந்தால் தானே டென்ஷன் ஆக வேண்டும்.

குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. அமைச்சர் சேகர் பாபுவிற்கு பதிலடி கொடுத்த தமிழிசை!

குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. அமைச்சர் சேகர் பாபுவிற்கு பதிலடி கொடுத்த தமிழிசை!

அமைச்சர் பதிலடி

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கூண்டோடு ஏறக்கட்டி விட்டோம். அதன் பிறகு நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும்? அவர்களுக்கு எங்களை பார்த்துதான் இப்போது டென்ஷன். திமுகவை பொருத்தவரை தேர்தல் பணியை தொடங்கி விட்டோம்.நாடாளுமன்ற தேர்தலை

குளத்தில் தாமரை மலர்ந்தால் கூட டென்ஷன் ஆகிறாரா? தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி! | Mimister Sekar Babu Reacts To Tamilisais Speech
 நாலு கால் பாய்ச்சலில் சந்தித்த திமுக தற்போது எட்டு கால் பாய்ச்சலில் பாய தயாராகி விட்டது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் 234 என்ற இலக்கை நோக்கி திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே டென்ஷன் என்பது எங்களுக்கு அல்ல எங்களை எதிர்த்து களத்தில் நிற்பவர்களுக்கு தான் டென்ஷன்"என பதிலடி கொடுத்துள்ளார்.