டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்; என்ன காரணம்? ஆராய்ச்சியாளர்கள் திணறல்!
கடற்கரையில், டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.
மீன்கள் இறப்பு
வடக்கு ஜப்பான், ஹொக்காய்டோ தீவு பகுதியில் உள்ள ஹகோடேட் கடல் பகுதியில், திடீரென லட்சக்கணக்கான மீன்கள் இறந்தன. குறைந்தது 1,000 டன் மீன்கள் இருக்கும் என தெரியவருகிறது.
அப்பகுதி மக்கள் மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர். ஆனால், அவற்றை சாப்பிட வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
என்ன காரணம்?
இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு சென்ற மீன் ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஃபுகுஷிமா அணு அலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
ஆய்வு முடிவு வெளியான பிறகே, மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.