1,500 மீன்கள் வெடித்து சிதறி பெரும் விபத்து : ஜெர்மனியில் பகீர் சம்பவம்
ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் சுமார் 1,500 மீன்கள் வசிக்கும் ஒரு பெரிய அக்வாரியம் ஒன்று, வெடித்துச் சிதறியதில் 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடைந்த மீன் அக்வாரியம்
பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் ஒரு வணிக வளாகத்தில் ரேடிசன் ஹோட்டல் மற்றும் அக்வாரியம் உள்ளது. அங்குள்ள உருளை அக்வாரியம் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் பரபரப்பான முக்கியச் சாலையில் ஒரு மில்லியன் லிட்டர் மற்றும் குப்பைகள் சிதறின.
உடனடியாக தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பதறிய மக்கள்
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீ லைஃப் பெர்லின்’-ஐ பொறுத்தவரை, இந்த உருளை அக்வாரியம்தான் உலகின் மிகப்பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் உருளை அக்வாரியம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் உயரம் 46 அடி ஆகும்.
ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் கூறுகையில், அக்வாரியம் வெடித்தது ஒரு நிலநடுக்கம் போல் உணரப்பட்டது என்றும், இச்சம்பவம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், நிறைய உயிரிழந்த மீன்கள், குப்பைகள் என இந்த இடம் காட்சியளித்ததாகவும் கூறினர்