கோகோ கோலா, பெப்சிக்கு போட்டியாக இறங்கிய பானம் - எகிறும் எதிர்பார்ப்பு!
பேரிச்சம் பழத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பானம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிலாஃப் கோலா
உலகிலேயே முதன்முறையாக பேரிச்சம் பழத்திலிருந்து ஒரு பானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான துராத் அல் மதினா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இதற்கு மிலாஃப் கோலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சர்க்கரையே சேர்க்கப்படவில்லை. உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பானம் இது. வழக்கமாக நாம் அருந்தக்கூடிய சோடாக்களைப் போலவே இது சுவையானதாக இருக்கும்.
பலன்கள்
ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது இதில் கிடைக்கும் பலன்கள் அதிகம். சர்வதேச அளவில் தர கட்டுப்பாட்டு சோதனைகள் அனைத்தையும் மிலாஃப் கோலா கடந்து தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
கூடிய விரைவில் பேரிச்சம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு உணவுப் பொருட்களை தங்கள் நிறுவனம் அறிமுகம் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ரியாத் பேரிச்சம் பழ திருவிழாவில் இந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற பலரும் இந்த பானத்தை அருந்திவிட்டு அருமையான சுவையில் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.