ஏர்போர்ட்டில் நுழைந்த குரங்கு; பெண் ஊழியர் செய்த செயல் - வைரல் வீடியோ!
விமான நிலையத்திற்குள் குரங்கு நுழைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஊழியரின் செயல்
உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் கருதப்படுகிறது. இதன் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், விமான நிலையத்திற்குள் ஒரு குரங்கு நுழைந்தது. ஆனால் விமான நிலைய ஊழியர்கள் குரங்கிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டனர். குரங்கு அந்தப் பெண்ணுக்கு கீழ்ப்படிந்து அங்கிருந்து வெளியேறத் தொடங்கும்.
வீடியோ வைரல்
விமான நிலைய ஊழியர்களும், குரங்குடன் நடந்து சென்று அதை வழிநடத்துவதைக் காணலாம். அந்தப் பெண்ணின் செயலை பலர் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்டதை அடுத்து,
விரைவில் மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரவியது. கிரப்பட்ட சில மணி நேரங்களில் 51,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் மற்றும் பரவலான கருத்துகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.