இந்த 5 நாடுகளில் தங்கம் விலை ரொம்ப குறைவு; வாங்கி வரலாமா? ரூல்ஸ் இதுதான்!
இந்தியாவை விட சில நாடுகளில் தங்கம் விலை குறைவாக இருக்கிறது.
தங்கம் விலை
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. ஆனால் பல வெளிநாடுகளில் நமது நாட்டை விடத் தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது.
துபாயில் ஒரு கிராம் 296.25 திர்ஹாமாக இருக்கிறது. (இந்திய மதிப்பில் 6,830.73 ரூபாய்). மலாவி நாட்டில் 2 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 6500. ஆஸ்திரேலியாவில் ஒரு கிராம் 124.80 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6,815ஆக இருக்கிறது).
ரூல்ஸ் என்ன?
கொலம்பியாவில் 22 கேரட் 3,284,100 கொலம்பிய பெசோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6535. மற்றும் இந்தோனேசியாவிலும் 22 கேரட் தங்கம் 12,159,000 இந்தோனேசிய ரூபியாக உள்ளது. (இந்திய மதிப்பில் ரூ. 6565). தற்போது வெளிநாட்டில் தங்கத்தை வாங்கி இந்தியாவுக்கு எடுத்து வரலாமே என்ற கேள்வி வரும்.
ஆனால் அதற்கு சில ரூல்ஸ் உள்ளது. பெண் பயணிகள் 40 கிராம் (அதிகபட்ச மதிப்பு ஒரு லட்சம் வரை), ஆண் பயணிகள் 20 கிராம் (அதிகபட்ச மதிப்பு ரூ. 50,00 0வரை) தங்கத்தை எடுத்து வரலாம்.
அவர்கள் குறிப்பிட்ட காலம் வெளிநாட்டில் இருந்து இருக்க வேண்டும். இதனை மீறி தங்கத்தை எடுத்து வந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.