படகு மூழ்கி பயங்கர விபத்து - குழந்தைகள் உட்பட 49 பேர் பலி, 140 பேர் மாயம்!

Yemen Death Somalia
By Sumathi Jun 12, 2024 08:30 AM GMT
Report

படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

படகு விபத்து

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 250 அகதிகளுடன் ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

படகு மூழ்கி பயங்கர விபத்து - குழந்தைகள் உட்பட 49 பேர் பலி, 140 பேர் மாயம்! | Migrants Boat Sank Off Yemen 49 Died

தொடர்ந்து, ஏமன் கடற்கரை அருகே வந்த அந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே, தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

 49 பேர் பலி

இந்த பயங்கர விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 71 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மாயமான சுமார் 140 பேரை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.

படகு மூழ்கி பயங்கர விபத்து - குழந்தைகள் உட்பட 49 பேர் பலி, 140 பேர் மாயம்! | Migrants Boat Sank Off Yemen 49 Died

தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐ.நா-வின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாத கணக்கீட்டின்படி சுமார் 3,80,000 புலம்பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.