தமிழ்நாடே வேண்டாம் - தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி வேதனை
தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளி மருத்துவமனையில் தமிழ்நாடே வேண்டாம்.. ஊருக்கு செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் அட்டூழியம்
திருத்தணி செல்லும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்த 4 சிறுவர்கள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜை கத்தியை காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்துள்ளனர்.

இதனால் சிராஜ் கண்டித்தவுடன், அவரை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, அப்படியே ரயிலில் இருந்து அவரை கீழே இறக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அரிவாளால் தலை, முகம், உடல் என பல பகுதிகளில் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தொழிலாளி வேதனை
அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். சிராஜ் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இங்கு தமிழ்நாட்டில் இருக்கவே விருப்பம் இன்றி, நான் என் சொந்த ஊருக்கே சென்று விடுகிறேன். அங்கேயே சிகிச்சை பார்த்துக்கொள்கிறேன் என்று மருத்துவர்களிடம் எழுதிக்கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.