வீட்டின் மேல் மோதி நொறுங்கிய மிக்-21 போர் விமானம் - 2 பெண்கள் பலி!

Plane Crash Rajasthan Accident
By Vinothini May 08, 2023 08:15 AM GMT
Report

விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய மிக்-21 எனும் போர்விமானம் ஒரு வீட்டின் மேல் விழுந்து 2 பெண்கள் பலியாகியுள்ளனர்.

போர் விமானம்

இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களுள் ஒன்று தான் இந்த MiG-21 ஜெட் விமானம். இது மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில் பறக்கும்.

mig-21-plane-crash-in-rajasthan-2-women-killed

இந்த 2ம் தலைமுறை விமானமானது தற்போதைய 5ம் தலைமுறை விமானத்திற்கு கூட சவால் விடக்கூடியதாகும். சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த விமானம் தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த விமானத்தை ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் தான் பயன்படுத்துகின்றன.

விபத்து

இந்நிலையில், இன்று இந்த விமான வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொது, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. மேலும், இது ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.

mig-21-plane-crash-in-rajasthan-2-women-killed

இந்த விபத்தில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததாகவும், விமானி அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளன மற்றும் ஒரு ஆண் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் சீட்டா ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இப்படியான தொடர் விபத்துக்கள் இந்திய விமானப்படையில் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.