MIDAS 2022: சாம்பியன்ஷிப்பை தட்டித்தூக்கிய மீனாட்சி அம்மாள் மருத்துவக் கல்லூரி!

Chennai
By Sumathi Nov 07, 2022 01:58 PM GMT
Report

MIDAS 2022 நிகழ்வில் மீனாட்சி அம்மாள் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பாராட்டுகளை குவித்துள்ளது.

மீனாட்சி அம்மாள் கல்லூரி

சென்னை, ஐடிஏமெட்ராஸ் கிளை அறிவியல் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வு ஒன்றை நடத்தியது. இதில், மீனாட்சி அம்மாள் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சமீபத்தில் நடைபெற்ற MIDAS 2022 தமிழ்நாடு மாநில மாணவர் மாநாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை வென்றுள்ளது.

MIDAS 2022: சாம்பியன்ஷிப்பை தட்டித்தூக்கிய மீனாட்சி அம்மாள் மருத்துவக் கல்லூரி! | Midas 2022 Function Championship Meenatchi College

இந்நிகழ்வில் கலந்து கொண்ட 20 பல்மருத்துவக் கல்லூரிகளில், மீனாட்சிஅம்மாள் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்களும் கலந்து கொண்டனர். கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ழான இந்நிகழ்வின் வெற்றியாளராக முதல் இடத்தையும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் பிடித்துள்ளனர்.

சாம்பியன் ஷிப்

இவைமட்டுமன்றி, விளையாட்டுப் போட்டிகளிலும் மீனாட்சிஅம்மாள் பல்மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப்பெற்று, மேலும் ஒரு வெற்றியைப் பெற்றனர். எளியமக்களுக்காக 1983 ஆம்ஆண்டு மீனாட்சி அம்மாள்அறக்கட்டளை நிறுவப்பட்டது.

MIDAS 2022: சாம்பியன்ஷிப்பை தட்டித்தூக்கிய மீனாட்சி அம்மாள் மருத்துவக் கல்லூரி! | Midas 2022 Function Championship Meenatchi College

நாட்டுகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்திலான, பொருத்தமான, சமகால மற்றும்உயர்தரகல்வியை வழங்கும் நோக்கத்துடன் திகழ்ந்து வரும் மீனாட்சிஅம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தமது அபாரமான சாதனைகளுக்காக வாழ்த்துகளை பெற்றுவருகிறது.