சர்க்கரை, உப்பில் ஒளிந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல்..எச்சரிக்கும் ஆய்வு!

Delhi India
By Swetha Aug 14, 2024 06:17 AM GMT
Report

சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் 

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவில் விநியோகிக்கப்படும் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

சர்க்கரை, உப்பில் ஒளிந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல்..எச்சரிக்கும் ஆய்வு! | Micro Plastic Found In Sugar Salt Shocking Report

அதில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான அயோடின் உப்பு, கல் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன. இவை 0.1 எம்எம் முதல் 5 எம்எம் அளவில் காணப்படுகின்றன.உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நுழைகின்றன.

சாப்பிட்ட உடனே டீ இல்ல காபி குடிப்பீங்களா? வேண்டவே வேண்டாம் - எச்சரிக்கும் ICMR

சாப்பிட்ட உடனே டீ இல்ல காபி குடிப்பீங்களா? வேண்டவே வேண்டாம் - எச்சரிக்கும் ICMR

எச்சரிக்கும் ஆய்வு

இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் படியக்கூடும். பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை, உப்பில் ஒளிந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல்..எச்சரிக்கும் ஆய்வு! | Micro Plastic Found In Sugar Salt Shocking Report

இந்த ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வா இது குறித்து பேசுகையில், “பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக் கையை வெளியிட்டு உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.