ஓப்பனிங் இறங்குகிறாரா "தல" தோனி..CSK'வின் secret - உளறிய மைக் ஹஸ்ஸி

MS Dhoni Chennai Super Kings IPL 2024
By Karthick Mar 21, 2024 04:31 AM GMT
Report

சென்னை அணி வீரர்கள் IPL தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

IPL தொடர்

துவங்கவிற்கும் IPL தொடர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. துவக்க போட்டியிலேயே சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

michael-hussey-clarifies-in-dhoni-opening-for-csk

இரு அணி வீரர்களுக்கு தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வரும் சூழலில், CSK அணியில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றது. காயம் காரணமாக ஓப்பனர் கான்வே இல்லாத காரணத்தால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் இறங்குவர் என்ற குழப்பம் நீடிக்கிறது.

michael-hussey-clarifies-in-dhoni-opening-for-csk

நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா தான் மற்றுமொரு ஒப்பனராக இறங்குவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படவில்லை.

ஓப்பனிங்கில்....

இது குறித்து பேசிய சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, டெவான் கான்வே போலவே ஆடக் கூடிய ரச்சின் ரவீந்திரா இப்போது தான் அணிக்கு வந்திருக்கிறார் என்று தெரிவித்து துவக்க வீரர்களாக வேறு வீரர்களை ஆட வைக்க எங்களுக்கு இன்னும் சில வாய்ப்புகளும் உள்ளன என குறிப்பிட்டார்.

IPL 2024 துவக்க விழா...குதூகல படுத்த வரும் திரை நட்சத்திரங்களின் பட்டியல் இதோ..!

IPL 2024 துவக்க விழா...குதூகல படுத்த வரும் திரை நட்சத்திரங்களின் பட்டியல் இதோ..!

கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ரஹானே பேட்டிங் வரிசையில் மேலே வந்து துவக்க வீரராக ஆட வாய்ப்பு உள்ளது என்ற மைக் ஹஸ்ஸி, கேப்டன் தோனியும் - பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் யாரை தேர்வு செய்வார்கள் என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

michael-hussey-clarifies-in-dhoni-opening-for-csk

சில காலமாக இம்பாக்ட் வீரராக சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரராக தோனி களமிறங்குவார் என்ற கருத்திற்கு பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.